\
கோபக்கார இளைஞனை காதலிக்கும் ஆனந்தி!

கோபக்கார இளைஞனை காதலிக்கும் ஆனந்தி!

கோபக்கார இளைஞனை காதலிக்கும் ஆனந்தி!
Published on: 

நடிகை விஜயலட்சுமி தனது, டீ டைம் டாக்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம், ‘பண்டிகை’. இதை அவர் கணவர் ஃபெரோஸ் இயக்குகிறார். கிருஷ்ணா, ‘கயல்’ ஆனந்தி, கருணாஸ், சரவணன், நிதின் சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். 'ஆரா சினிமாஸ்' வெளியிட உள்ள இந்தப் படத்தில் ஆனந்தி, கோபக்கார இளைஞனை காதலிக்கும் கேரக்டரில் நடிக்கிறார். 
படம் பற்றி ஃபெரோஸ் கூறும்போது, ’  சண்டை வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் இளைஞன், சந்தர்ப்ப சூழ்நிலையால் சட்டவிரோதமாக நடத்தப்படும் பந்தயச் சண்டைக்கு அறிமுகமாகிறான். அடக்கி வைத்த கோபத்தை வெளிக்காட்டும் இடமாகவும், பணம் கொட்டும் கோட்டையாகவும் இந்த பந்தய சண்டை இடம் திகழ்கிறது. இங்கு ஒரு பிரச்னையில் சிக்குகிறான் அந்த இளைஞன். அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான் என்பது கதை’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com