“ஒரு ஆண் நடிகர் தோற்றத்தை மாற்றினால் பாராட்டுகிறார்கள்..ஆனால்”-விமர்சனங்களுக்கு எமி ஜாக்சன் பதிலடி!

நடிகை எமி ஜாக்சனின் சமீபத்திய ஹேர்ஸ்டைல் மாற்றம் சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.
amy jackson
amy jacksonInsta

ரஜினிகாந்த் நடித்த 2.O மற்றும் அக்‌ஷய் குமாரின் சிங் இஸ் ப்ளையிங் திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்த எமி ஜாக்சன், தமிழ் திரைப்படத்துறையில் மதராசப்பட்டினம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, தேவி முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மதராசப்பட்டினம், ஐ படங்களில் அவர் நடித்த துரையம்மாள், தியா போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. அதிலும் துரையம்மாள் காதாபாத்திரத்திற்காக மட்டுமே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

amy jackson
amy jackson

இந்நிலையில் தனது புதிய திரைப்படத்திற்காக எமி ஜாக்சன் மாற்றியிருக்கும் தோற்றமானது, ரசிகர்கள் மத்தியில் டிரோல் மெட்டீரியலாக மாறியது. எமி தன்னுடைய அதிகாரப்பூர்வமான வலைதள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படத்தில், அவருடைய ஹேர் ஸ்டைல் முற்றிலும் வேறுவிதமாக மாற்றப்பட்டு, உடல் இளைத்து காணப்பட்டார். எமியின் இந்த மாற்றத்தை எதிர்ப்பார்க்காத ரசிகர்கள், அவருடைய தோற்றம் குறித்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரசிகர்கள் ட்ரோல் செய்வது தனக்கு சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக எமி ஜாக்சன் கூறியுள்ளார்.

ஒரு பெண்ணை விமர்சிக்க மட்டும் அனைவருக்கும் முழு உரிமை கிடைத்து விடுகிறது!

தன்னுடைய சமீபத்திய தோற்றம் ட்ரோல் செய்யப்படுவது வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்திருக்கும் எமி ஜாக்சன், இங்கிலாந்தில் படமாக்கும் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றத்தை செய்திருப்பதாக தெரிவித்தார்.

amy jackson
amy jackson

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுடன் பேசியுள்ள அவர், “புதிய படத்திற்காகவே மாற்றப்பட்ட தோற்றத்தை பார்த்து இந்தியாவில் இருந்து அதிக விமர்சனங்கள் (நிறைய ஆண்களிடமிருந்து) எழுந்துள்ளது வருத்தமளிக்கிறது. நான் இந்தியாவில் பல ஆண் சக நடிகர்களுடன் பணிபுரிந்துள்ளேன். அப்போது அவர்கள் படத்திற்காக மேற்கொள்ளும் மாற்றத்திற்காக அதிகம் பாராட்டப்பட்டனர். அதையே ஒரு பெண் செய்யும் போது தான் இப்படியெல்லாம் நடக்கிறது.

amy jackson
amy jackson

ஒரு பெண் அழகு குறித்த அவர்களின் வரையறையை மீறி எப்போதும் இல்லாத வகையில் அசாதரணமாக முடி மற்றும் தோற்றத்தை மாற்றிக்கொண்டால், அந்த பெண்ணை விமர்சிக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் இருப்பதாக நினைத்து கொள்கிறார்கள்” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அதே சமயம் அவரது ஹேர்ஸ்டைல் மாற்றம், ஐரிஷ் நடிகர் சிலியன் மர்பியின் பீக்கி ப்ளைண்டர்ஸ் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பேசப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், தனது புதிய திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து கடுமையாக உழைத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com