1980-களில் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அம்பிகா. அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனுமே கிட்டத்தட்ட ஜோடி போட்டவர். தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்ற ஒரு இடத்தையும் பிடித்தார். தற்போது இவரின் மகன் வெள்ளித் திரையில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்பிகா இதுகுறித்து பேசும் போது, " இக்கால கதாநாயகர்கள் எல்லோரும் தாங்கள் செய்யும் வேலை குறித்து தேவையான அளவிற்கு தெரிந்து வைத்துள்ளார்கள். ஒவ்வொருவரும் தனக்கென்று தனித்துவத்தை பின்பற்றுகிறார்கள். எந்தவிதமான கதாபாத்திரத்திற்கும் ஏற்றவகையில் தங்களை தயார்படுத்தி நடிக்க எளிதில் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களின் மிகப்பெரிய ப்ளஸ்" என்றார்.
சரி.. உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பிடித்த ஹீரோ தான் யார்..? என அவரிடம் கேட்டபோது, " என் மகன் ராம் கேஷவ் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறார். மலையாளம் அல்லது தமிழ் அவரது முதல் படமாக இருக்கும். என் மகனே ஹீரோவாக அறிமுகமாகும் போது, மற்ற ஹீரோக்களில் யார் அழகாக இருக்கிறார். சிறப்பாக நடிக்கிறார் என சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது" என பிடித்த ஹீரோவின் பெயரை சொல்ல மறுத்துவிட்டார் அம்பிகா.