த்ரில்லரில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷின் ’திட்டம் இரண்டு’ ட்ரெய்லர்

த்ரில்லரில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷின் ’திட்டம் இரண்டு’ ட்ரெய்லர்
த்ரில்லரில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷின் ’திட்டம் இரண்டு’ ட்ரெய்லர்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ’திட்டம் இரண்டு’ திரைப்படத்தின் டிரெய்லரும் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்திருக்கிறது படக்குழு.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கனா’ படத்திலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ‘திட்டம் இரண்டு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் டிரெய்லரும் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருக்கிறது படக்குழு. வரும் 30 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ‘திட்டம் இரண்டு’ வெளியாகிறது. டிரெய்லரில் அடுத்தடுத்து நடக்கும் மர்மக்கொலைகளும் அதனை கண்டுப்பிடிக்கும் காவல்துறை அதிகாரியாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் மிரட்டுகிறார். குறிப்பாக, படத்தின் இசையே டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com