\
விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’: ஐஸ்வர்யா ராஜேஷ் பகுதிகள் நிறைவு

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’: ஐஸ்வர்யா ராஜேஷ் பகுதிகள் நிறைவு

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’: ஐஸ்வர்யா ராஜேஷ் பகுதிகள் நிறைவு
Published on

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ படத்தில் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் பகுதிகள் நிறைவடைந்ததையொட்டி படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘மோகன்தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது, மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், வேகமாக ஐஸ்வர்யா ராஜேஷ் பகுதிகளை படமாக்கி முடித்துள்ளது படக்குழு. இன்று நிறைவடைந்ததையொட்டி விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார். பிரபல மலையாள நடிகரும் பிரித்விராஜின் அண்ணனுமான இந்திரஜித் சுகுமாரனும் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com