\
’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு உற்சாகமுடன் நடனம் ஆடும் ராஷி கண்ணா!

’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு உற்சாகமுடன் நடனம் ஆடும் ராஷி கண்ணா!

’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு உற்சாகமுடன் நடனம் ஆடும் ராஷி கண்ணா!
Published on

தீ, 'தெருக்குரல்' அறிவு பாடி இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்த ’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடிகை ராஷி கண்ணா உற்சாகமுடன் நடனம் ஆடியிருப்பது ஹார்ட்டின்களை குவித்து வருகிறது.

கபாலி படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா’, இறுதிச் சுற்று படத்தில் ’ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, ஜிப்ஸி படத்தில் ‘எங்கும் மாய ஊஞ்சல்’ சூரரைப் போற்று படத்தில் ’காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட’’கர்ணன்’ படத்தில் ‘உட்றாதீங்க எப்போவ்’ என தமிழகம் தாண்டி வைரல் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான இவர், வடச்சென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என மேலும் பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

இவரும் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து ’என்ஜாய் எஞ்சாமி’ இண்டிபெண்டண்ட் பாடல் பாடலை பாடியிருகிறார்கள். வித்தியாசமான பின்னணியில் கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்ட இப்பாடலைக் கேட்டுக் கேட்டு மக்களும் திரை பிரபலங்களும் எஞ்சாய் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிடும் பாராட்டுகளே சாட்சி. சமீபத்தில் அமுல் நிறுவனமும் தீ, அறிவு இருவரையும் அமுல் குழந்தைகளாகப் போட்டு சிறப்பித்திருந்தது. நடிகர் சூர்யாவும் நேற்று முன் தினம் ட்விட்டரில் இப்பாடலை பாராட்டி இருந்தார்.

View this post on Instagram

A post shared by alya_manasa (@alya_manasa)

இந்நிலையில், இப்பாடலுக்கு நடிகைகள் நடனம் ஆடி வருகிறார்கள். கடந்தவாரம் சின்னத்திரை முன்னணி நடிகை ஆல்யா மானசா இப்பாடலுக்கு நடனம் ஆடி இன்ஸ்டாவில் பதிவ்விட்டதை பல லட்சம் பேர் பார்த்திருந்தார்கள். இந்நிலையில், நடிகை ராஷி கண்ணா தனது தோழியுடன் உற்சாமுடன் நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவிற்கு மூன்று லட்சம் பேருக்குமேல் ஹார்ட்டின்களை தெறிக்கவிட்டிருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com