\
உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடும் ஜெனிலியா! - வைரல் வீடியோ

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடும் ஜெனிலியா! - வைரல் வீடியோ

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடும் ஜெனிலியா! - வைரல் வீடியோ
Published on

‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடிகை ஜெனிலியா தனது உடைந்த கையுடன் தனது கணவருடன் டான்ஸ் ஆடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ இப்போதுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. படம் வெளியான பின்பு உலகம் முழுக்க இப்போதுவரை ரசிகர்களும் பிரபலங்களும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை ஜெனிலியாவுக்கு சமீபத்தில்தான் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டபோது கீழே விழுந்து கையில் அடிப்பட்டது. அந்த உடைந்த கையுடன் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் நண்பர்களுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாகமுடன் நடனம் ஆடுகிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Genelia Deshmukh (@geneliad)

ஏற்கெனவே ஜெனிலியா விஜய்யுடன் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com