சினிமா
'வக்கிரபுத்திக்காரர்களின் கைகளை வெட்டுங்கள்' - அனுஷ்கா ஆவேசம்
'வக்கிரபுத்திக்காரர்களின் கைகளை வெட்டுங்கள்' - அனுஷ்கா ஆவேசம்
பாலியல் தொல்லை கொடுக்கும் வக்கிர புத்திக்காரர்களின் கைகளை வெட்ட வேண்டும் என நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமா துறையில் நடிகை அனுஷ்கா முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். பாகுபலி-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து பாகமதி படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்தப் படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனுஷ்கா, பெண்கள் அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக கூறினார். மேலும், இந்தியாவில் 60 சதவிகிதம் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களாலேயே பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
வக்கிரபுத்திகாரர்களின் கைகளை வெட்ட வேண்டும், என்றும் பெண்களை தவறான எண்ணத்தோடு தொடும் ஆண்களின் மனதில் உள்ள அகங்காரத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.