\
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வெற்றிமாறன் - ஆண்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வெற்றிமாறன் - ஆண்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வெற்றிமாறன் - ஆண்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’
Published on: 

ஆண்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’, ‘அரண்மனை 3’ படத்திற்குப்பிறகு ஆண்ட்ரியா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் முதல் படம் ‘அனல் மேலே பனித்துளி’. இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இப்படத்தினை கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கிய ‘வடச்சென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. மீண்டும் இணைந்திருப்பதால் கவனம் ஈர்க்கக்கூடிய கதையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு 2’ படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com