\
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்துடன் மோதும் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்துடன் மோதும் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்துடன் மோதும் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’
Published on

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் ‘எனிமி’ வெளியாகி கவனம் ஈர்த்தது. அடுத்ததாக, ‘வீரமே வாகை சூடும்’ படத்தில்நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம்.

இந்த நிலையில், படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகிறது என்று படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது. அதே தினத்தில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படமும் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com