\
விடுதலை பாகம் 2
விடுதலை பாகம் 2முகநூல்

டப்பிங்... டீ-ஏஜிங் தொழில்நுட்பம்... முழு வீச்சில் தயாராகும் விடுதலை பாகம் 2!

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி தொடங்கிவிட்டனர்.
Published on

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி தொடங்கிவிட்டனர்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும், விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.

விடுதலை பாகம் 2
வேட்டையன் | கோவில்பட்டி அரசுப்பள்ளி தொடர்பான காட்சிக்கு எதிர்ப்பு - இயக்குநர் மீது போலீசில் புகார்!

மேலும் விஜய்சேதுபதியை இளமையாக காண்பிக்க டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com