அடுத்த ஆண்டு ஜீவா-சிவா நடிப்பில் முழுநீள நகைச்சுவை திரைப்படமாக வெளியாகும் ‘கோல்மால்’

அடுத்த ஆண்டு ஜீவா-சிவா நடிப்பில் முழுநீள நகைச்சுவை திரைப்படமாக வெளியாகும் ‘கோல்மால்’
அடுத்த ஆண்டு ஜீவா-சிவா நடிப்பில் முழுநீள நகைச்சுவை திரைப்படமாக வெளியாகும் ‘கோல்மால்’

ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-சிவா இணைந்து கலக்கவிருக்கும் கலகலப்பான குடும்பத் திரைப்படம் ‘கோல்மால்’. இந்த படம் குறித்த விவரங்களை அளித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் பொன்குமரன்.

 ‘மிருகா' படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸின் பி.வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'கோல்மால்’ என்ற இந்த புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்த தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் இயக்குநர் பொன்குமரன் இந்த படம் பற்றிக் கூறுகையில், “முழுநீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கோல்மால் இருக்கும், இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும், ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும். ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும்போது அது இன்னும் சிறப்பாக இருக்கும். பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே எஸ் ஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

'கோல்மால்' முழுபடமும் மொரிஷியஸில் அதிக பொருட்செலவில் படமாக்கப்படும். இந்தப் படத்தை தயாரிப்பதற்கு வினோத் ஜெயின் மிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்துள்ளார். நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும். அருள் தேவ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை எஸ்.சரவணன் கையாளவுள்ளார். படத்தொகுப்பை டான் போஸ்கோவும், கலை இயக்கத்தை சிவாவும் மேற்கொள்ள, கவிஞர்கள் மதன் கார்க்கி மற்றும் விவேகா பாடல்களை இயற்றவுள்ளனர்.

எம் நரேஷ் ஜெயின் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். எம்.செந்தில் நிர்வாக தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வார். டூனி வடிவமைப்பு பணிகளை செய்வார். படத்தின் மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிப்பார்’’ என்று படம் குறித்த முழு விவரங்களையும் அவர் தெரிவித்திருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com