அருவியில் ஜெய் - ராய் லட்சுமி விளையாட்டு !

அருவியில் ஜெய் - ராய் லட்சுமி விளையாட்டு !
அருவியில் ஜெய் - ராய் லட்சுமி விளையாட்டு !

ஜெய் கதாநாயகனாக நடிக்கும் "நீயா-2" படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கமல் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ல் வந்த படம் ‘நீயா’.  இதன் 2-ம் பாகம் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘நீயா 2’ என்ற பெயரில் புதிய பரிமாணத்தில் தயாராகிறது. இப்படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராட்சதப் பாம்பு இடம்பெறுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் வரலட்சுமி, கேத்ரின் தெரசா , ராய் லட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். நீயா-2 படப்பிடிப்பு புதுச்சேரியைத் தொடர்ந்து தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல் ஆகியப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இப்போது கேரளம் மாநிலம் சாலக்குடியில் உள்ள புகழப் பெற்ற அதிரப்பள்ளி நீர் விழுச்சியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில்
நடிகர் ஜெய் - ராய் லட்சுமி நீர் விழுச்சிப் பகுதிகளில் ஜாலியாக குளித்து விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை, நடிகர் ஜெய்
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். எல்.சுரேஷ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com