\
நடிகர் சங்கத் தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்தது கே.பாக்யராஜ் அணி

நடிகர் சங்கத் தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்தது கே.பாக்யராஜ் அணி

நடிகர் சங்கத் தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்தது கே.பாக்யராஜ் அணி
Published on

நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்க வேண்டும் என்பது மட்டுமே தனது விருப்பம் என கமல்ஹாசன் தெரிவித்ததாக, நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பாக்யராஜ் கூறியுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் கே.பாக்யராஜ் தலைமை யிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகிறது. இதற்கான பிரசாரத்தில் இரு தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகளைச் சந்தித்து ஆதரவும் திரட்டி வருகின்றனர். 

கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனை இன்று சந்தித் தனர். இந்த சந்திப்பில் அவர்கள் தரப்பில் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை கமல்ஹாசனிடம் காண்பித்ததாகவும், அதற்கு திருப்திகரமாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ் குறிப்பிட்டார். 

அதோடு, கமல்ஹாசனின் ஆதரவு, பாண்டவர் அணிக்கு இருப்பது போன்ற தோற்றம் இருப்பதாகவும், அதில் உண்மையில்லை எனவும் பாக்யராஜ் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com