\
“முடிதான் எனக்கு சோறு போடுகிறது” - யோகிபாபு

“முடிதான் எனக்கு சோறு போடுகிறது” - யோகிபாபு

“முடிதான் எனக்கு சோறு போடுகிறது” - யோகிபாபு
Published on

விஜய் படத்திற்கான மேடையில் அஜித் பெயரை நடிகர் யோகிபாபு குறிப்பிட்டு பேசினார்.

நடிகர் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்கார்’. இந்தத் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, வரலக்ஷ்மி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகின. 

இந்நிலையில் சர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நடிகர் யோகிபாபு, 'சர்கார்' போன்ற பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். விஜய் அண்ணாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி. நான் காமெடி, குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஹீரோவாக நடிக்கவில்லை. எனக்கு மூளை சோறு போடவில்லை. முடிதான் சோறு போடுகிறது. நான் அஜித்துடனும் நடித்துக் கொண்டிருக்கிறேன். விஜய் அண்ணா வேற லெவல் என்று தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com