அட்லீ - ஷாருக்கான் படத்தில் இணைந்த நடிகர் யோகி பாபு
ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா நடிக்கிறார்கள்.
புனேவில் சில நாட்களில் தொடங்கவிருக்கும் படப்பிடிப்புக்காக நடிகை நயன்தாரா,பிரியாமணி உள்ளிட்டோர் புனேவுக்கு சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், யோகி பாபு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: செப்டம்பர் 8-ல் தொடங்கும் ஷங்கர் -ராம் சரண் படப்பிடிப்பு