\
மலையாள இயக்குநர் இயக்கத்தில் யோகிபாபு: பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு

மலையாள இயக்குநர் இயக்கத்தில் யோகிபாபு: பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு

மலையாள இயக்குநர் இயக்கத்தில் யோகிபாபு: பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு
Published on: 

நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது. 

யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com