\
“எனக்கு ஹீரோ முகம் கிடையாது” - மனம்திறந்த யோகி பாபு

“எனக்கு ஹீரோ முகம் கிடையாது” - மனம்திறந்த யோகி பாபு

“எனக்கு ஹீரோ முகம் கிடையாது” - மனம்திறந்த யோகி பாபு
Published on

தனக்கு கதாநாயகனுக்கான முகம் இல்லை என்றும், தான் எப்போதும் காமெடியன்தான் எனவும் நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் பேய் மாமா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகர் யோகிபாபு, இயக்குனர் மிஷ்கின், பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய யோகிபாபு, தனக்கு ஹீரோ கதாபாத்திரத்துக்கான முகம் இல்லை எனவும், ஆனால் இயக்குநர் சக்தி சிதம்பரம் தன்னை கதாநாயகனாக நிறுத்தியது அச்சத்தை தருவதாகவும் தெரிவித்தார். வடிவேல் ஒரு மேதாவி என்றும், அவருக்காக எழுதிய பேய் மாமா கதை தனக்காக மாற்றி எழுதப்பட்டதாகவும் அவர் கூறினார். அத்துடன் தான் சம்பள விவகாரத்தில் கறார் இல்லை என்றும், அண்மையில் கூட ஒரு உதவிப் பெண் இயக்குநரின் படத்திற்காக சம்பளம் இன்றி நடித்துக்கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com