\
யோகி பாபு - ஓவியா இணையும் ’கான்ட்ராக்டர் நேசமணி’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

யோகி பாபு - ஓவியா இணையும் ’கான்ட்ராக்டர் நேசமணி’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

யோகி பாபு - ஓவியா இணையும் ’கான்ட்ராக்டர் நேசமணி’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
Published on: 

நடிகர் யோகி பாபு - ஓவியா இணையும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது.

‘பீஸ்ட்’, ‘வலிமை’ என முன்னணி நடிகர் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவரும் யோகி பாபு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாயகனாக அவர் நடித்த ‘மண்டேலா’ சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக, யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், யோகி பாபு ஹீரோவாகவும் ஓவியா ஹீரோயினாகவும் நடிக்கும் ’கான்ட்ராக்டர் நேசமணி’படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தை ஸ்வஸ்தீஸ் இயக்குகிறார். பூஜையில், யோகி பாபு, ஓவியா, டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதோடு, பூஜையிலேயே ‘கான்ட்ராக்டர் நேசமணி’ டைட்டில் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். விஜய்யின் ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு ‘கான்ட்ராக்டர் நேசமணி’யாக நடித்திருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு உலகளவில் ட்ரெண்டிங்கும் ஆனது. இப்போது, அதே டைட்டிலை யோகி பாபு படத்திற்கு வைத்துள்ளார்கள்.