”நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்து ’கேஜிஎஃப்2’ படத்தை வெளியிடுகிறோம்” : யஷ்

”நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்து ’கேஜிஎஃப்2’ படத்தை வெளியிடுகிறோம்” : யஷ்

”நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்து ’கேஜிஎஃப்2’ படத்தை வெளியிடுகிறோம்” : யஷ்
Published on

ஒரே சமயத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளியாவதை தவிர்க்க முடியாது என்று கன்னட நடிகர் தெரிவித்துள்ளார்.

கே.ஜி.எஃப்-2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் யஷ், நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய யஷ், “தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார். அதிலும் இந்தப் படத்தில் பணியாற்றிய சண்டைபயிற்சியாளர்கள் அன்பறிவு நேர்த்தியாக பணியாற்றினர். அதற்கு அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியை தந்தது. அதே போல் ஒரு திரைப்படத்தை உருவாக்கி டப்பிங் செய்வது கடினமான விஷயம். அதிலும் வேறு மொழிகளில் டப்பிங் செய்யும் பொழுது இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அந்த மொழி மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை தமிழில் வசனம் எழுதிய அசோக் சிறப்பாக செய்தார். அத்துடன் இனி தான் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் தமிழில் சொந்த குரலில் டப்பிங் பேச முயற்சி செய்வேன்” எனவும் தெரிவித்தார்.

அப்போது பீஸ்ட் - கே.ஜி.எஃப்-2 ஆகிய இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகின்றன. அதில் கே.ஜி.எஃப் திரைப் படத்திற்கு கிடைத்திருக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை மகிழ்ச்சியை அளிக்கிறதா என்று கேள்வி புதிய தலைமுறை சார்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யஷ், “எட்டு மாதங்களுக்கு முன்பே நாங்கள் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டோம். ஆனால் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாவதை தவிர்க்க முடியாது. வரவேற்புக்கு ஏற்ற வகையில் எங்களுக்கு இந்தப் படம் வேண்டும் என்று திரையரங்குகளை அவர்களே ஒப்பந்தம் செய்கின்றனர். மேலும் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஒரு படத்துடன் வெளியான இன்னொரு திரைப்படத்திற்கு திரையரங்குகள் குறையும், நமது படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு படத்திற்கும் ஒரு விதி உள்ளது. நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்து கே.ஜி.எஃப்-2 படத்தை வெளியிடுகிறோம்” என பதிலளித்தார்.

இந்த திரைப்படத்தின் பற்றி இயக்குனர் பிரசாந்த் நீல் பேசும்போது, கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு தமிழக மக்கள் வழங்கிய வரவேற்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். மேலும் இந்த திரைப்படம் கேமரா, செட்டைவிட மனிதர்களால் தான் சாத்தியமானது என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com