\
'கேஜிஎஃப் 2’ மகளிர் தின ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட படக்குழு

'கேஜிஎஃப் 2’ மகளிர் தின ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட படக்குழு

'கேஜிஎஃப் 2’ மகளிர் தின ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Published on: 

மகளிர் தினத்தையொட்டி ‘கேஜிஎஃப் 2’ படத்தில் நடித்துள்ள நடிகைகளை பெருமைப்படுத்தும் விதமாக ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு.

’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், இன்று மகளிர் தினத்தையொட்டி ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், அர்ச்சனா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரின் புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் யஷ் கதாபாத்திரம் பெரிய டான் ஆக காண்பிக்கப்பட்டாலும், அவரைப்போலவே வலுவான கதாபாத்திரத்தில் ரெளடி காதலியாக ஸ்ரீநிதி ஷெட்டி, யஷ் அம்மாவாக நடித்து சென்டிமெண்ட்டில் உருகவைத்த அர்ச்சனா, யஷ் குறித்து சொல்லப்படும் போதெல்லாம் ’ரொம்ப பின்னாடி போய்ட்டீங்க… இன்னும் கொஞ்சம் முன்னாடி வாங்க’ என்று பார்வையாளர்களுக்கு புரியும்படி கதையை கொண்டுசெல்லும் கோர்வையாளராக மாளவிகா அவினாஷ் என ஒவ்வொருவரும் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள்.

அதேபோல், ‘கேஜிஎஃப் 2’ வில் ரவீனா டண்டன், ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்கள். படம் வெளியானால் அவர்களுக்குரிய முக்கியத்துவம் தெரியும். ஆனாலும், ரவீனா டண்டன் நடிப்பதால் ஏதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com