\
ஓடிடியில் வெளியானது ‘கேஜிஎஃப் 2’!

ஓடிடியில் வெளியானது ‘கேஜிஎஃப் 2’!

ஓடிடியில் வெளியானது ‘கேஜிஎஃப் 2’!
Published on: 

யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ ஓடிடியில் வெளியாகியுள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ வசூலில் ரூ.1000 கோடி ரூபாய்யை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும், ‘கேஜிஎஃப் 2’ வெற்றியால் பாலிவுட் கதிகலங்கிப் போயுள்ளது. பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி2’-க்கு அடுத்த ‘டான்’ நான் என ‘கேஜிஎஃப் 2’ இரண்டாம் இடத்தைப் பிடித்து தென்னிந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

தமிழகத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரூ.100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து ராக்கி பாயின் ராஜாங்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தளவிற்கு, ‘அவன் கத்தி வீசின வேகத்துல புயலே உருவாகிடுச்சி சார்’ என பில்டப் காட்சிகளால் தியேட்டரையே பிளிறிடவைத்தார் பிரஷாந்த் நீல்.

பில்டப் காட்சிகள் மட்டுமல்லாமல் இறுதிக்காட்சியில் ரசிகர்களை ஃபீல் செய்யவும் வைத்ததோடு மூன்றாம் பாகத்திற்கான லீடை ரவீனா டாண்டன் சொல்வதுபோல் காட்சிகள் அமைத்திருந்தார். இதனால், ரசிகர்கள் மத்தியில் ‘கேஜிஎஃப் 3’க்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம், ‘கேஜிஎஃப் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதிக்காகவும் காத்திருந்தார்கள்.

இந்த நிலையில், இன்று ‘கேஜிஎஃப் 2’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆனால், ரூ 199 ரூபாய் கட்டணம் செலுத்திதான் படத்தைப் பார்க்க முடியும். இந்த ரூ.199 செலுத்தினால் 48 மணி நேரத்திற்குள் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம். கட்டணமில்லாமல் ‘கேஜிஎஃப் 2’வை மே 27 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமிலேயே பார்க்கலாம். தற்போது, ஓடிடியில் வெளியானதையடுத்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com