சினிமா
ராம்ராஜ் நிறுவனத்தின் விளம்பரத் தூதரானார் நடிகர் யாஷ்
ராம்ராஜ் நிறுவனத்தின் விளம்பரத் தூதரானார் நடிகர் யாஷ்
பிரபல கன்னட நடிகர் யாஷ், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகியுள்ளார். நடிகர் யாஷ் போன்ற ஊக்கமளிக்கும் நடிகர் ஒருவர், தங்களது நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ராம்ராஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடிப்பது மட்டுமன்றி சமூக சேவையிலும் பங்காற்றிவரும் நடிகர் யாஷுடன் இணைவதில் பெருமை கொள்வதாக ராம்ராஜ் நிறுவனம் கூறியுள்ளது. அவருடன் இணைந்து சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரவும், நெசவாளர்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற உள்ளதாகவும் ராம்ராஜ் தெரிவித்துள்ளது.

