பெட்டிக்கடையில் தன் மனைவிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த நடிகர் யாஷ்.. வைரலாகும் புகைப்படம்!

பிரபல கன்னட நடிகரான யாஷ், தன் மனைவிக்கு சிறு கடை ஒன்றில் சாக்லேட் வாங்கிக் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் யாஷ்
நடிகர் யாஷ்ட்விட்டர்

‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர், நடிகர் யாஷ். இவர் ‘ராக்கிங் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என விமரசன ரீதியாக வெற்றிபெற்றதுடன், வசூலையும் வாரிக் குவித்தது. 1000 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது.

இந்த நிலையில், கீது மோகன்தாஸ் இயக்க கே.வி.என் புரொடக்ஷன் மற்றும் மாஸ்டர் மின்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ’டாக்சிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் தன் மனைவி ராதிகாவுடன் ஷிராலியின் பட்கலில் உள்ள சித்ரபுரா மட கோயிலுக்குச் சென்ற நடிகர் யாஷ், அருகிலிருந்த சிறு பெட்டிக்கடை ஒன்றில் மனைவிக்குப் பிடித்த சாக்லேட்டை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்தப் படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. யாஷ் சிறு கடையில் மிகவும் எளிமையாக மிட்டாய் வாங்கிக் கொடுத்த செய்தியைக் கண்டு அவரது ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: ’அக்பரும் சீதாவும் ஒரே இடத்திலா?’ - அதிர்ச்சியடைந்த விஷ்வ ஹிந்து அமைப்பு; கோர்ட்டில் வழக்கு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com