நடிகை ஜோதிகாவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா பலரும் விரும்பும் நடிகையாக வலம் வருபவர். அவரது சின்னச்சின்ன குறும்புத்தனங்களை திரையில் காணும் ரசிகர்கள் அவரை அதிகமாக கொண்டாட ஆரம்பித்தார்கள். இந்நிலையில் அவர் நடித்த ‘நாச்சியார்’ வெளி வந்த பிறகு தனது திரை வாழ்க்கையில் அவர் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். ஜோதிகாவை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் “ நேற்றுதான் நடிகை ஜோதிகாவை பார்த்திபன் மகள் திருமணத்தில் தற்செயலாக கண்டேன். பார்ப்பதற்கே இனிதாக இருந்தார். அவரது நம்பிக்கை மிளிர்ந்தது. அவர் ஒரு மனைவியாக ஒரு அம்மாவாக ஒரு நிர்வாகியாக ஒரு கும்பத்தலைவியாக திரும்பவும் ஒரு நடிகையாக சாதித்திருக்கிறார். நேற்று மகளிர் தினம். பலருக்கும் அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த ட்விட்டிற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார்.

