சினிமா
கமலின் உறுதி இறுதிவரை இருக்கட்டும்: விவேக் ட்விட்!
கமலின் உறுதி இறுதிவரை இருக்கட்டும்: விவேக் ட்விட்!
அரசியலுக்கு வருவதை நடிகர் கமல்ஹாசன் உறுதி செய்துள்ள நிலையில், அவரது இந்த உறுதி, இறுதிவரை இருக்க வாழ்த்துக்கள் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் நூறு நாட்களில் தேர்தல் வந்தாலும் அதனை தனியாகவே சந்திக்கப் போவதாக கமல்ஹாசன் கூறியிருந்தார். இதுவரை சூசகமாக பேசி வந்த கமல், அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தெளிவான கருத்துக்களை நேற்று கூறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், ’அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல்! அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்! வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும், மகுடம் தரிக்க வைப்பது மக்களே’ என்று கருத்து பதிவிட்டுள்ளார்.