நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 12 ஆயிரம் பேருக்குமேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண் விஜய் உள்ளிட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ”2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பாசிட்டிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு உள்ளது. விரைவில் மீண்டு வருவேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் விரைவில் ‘மோகன்தாஸ்’, ‘எஃப்.ஐ.ஆர்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவுள்ளன. தெலுங்கு நடிகர் ரவிதேஜாவுடனும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.