\
’யாரிவன் யாரிவன்’ - சிம்பு குரலில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ தீம் பாடல்

’யாரிவன் யாரிவன்’ - சிம்பு குரலில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ தீம் பாடல்

’யாரிவன் யாரிவன்’ - சிம்பு குரலில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ தீம் பாடல்
Published on: 

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷால்-மஞ்சிமா மோகன் நடித்துள்ள ’எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கெளதம் மேனன், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அஷ்வத் இசையமைத்துள்ளார். அபுபக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக கவனம் ஈர்க்கிறார் விஷ்ணு விஷால். அவரே தயாரித்து நடித்துள்ள இப்படத்தில் சிம்பு ’யாரிவன் யாரிவன்’ என்று தொடங்கும் தீம் பாடலை பாடகர் கிறிஸ்டோபர் ஸ்டேன்லியுடன் இணைந்து பாடியுள்ளார். எல். கருணாகரன் இப்பாடலை எழுதியுள்ளார்.

ஏற்கனவே, ‘மாநாடு’ படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமியராக நடித்தார் சிம்பு. அபுபக்கர் அப்துல்லாவுக்கு பாடல் பாடிய அப்துல் காலிக் என்று சமூக வலைதளங்களில் கருத்திட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com