நடிகர் விஷ்ணு-ரஜினி நட்ராஜ் தம்பதியினருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை விஷ்ணு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் விஷ்ணு. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் கே.நடராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இன்று காலை நடிகர் விஷ்ணு-ரஜினி நட்ராஜ் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷமான தருணத்தை விஷ்ணு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தனக்கு குழந்தை பிறந்த இந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு கடவுளுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் விஷ்ணு. குழந்தையின் புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார் விஷ்ணு.

