\
’வீரமே வாகை சூடும்’: கவனம் ஈர்க்கும் ‘விஷால் 31’ படத்தின் தலைப்பு

’வீரமே வாகை சூடும்’: கவனம் ஈர்க்கும் ‘விஷால் 31’ படத்தின் தலைப்பு

’வீரமே வாகை சூடும்’: கவனம் ஈர்க்கும் ‘விஷால் 31’ படத்தின் தலைப்பு
Published on

’விஷால் 31’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தலைப்பும் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஷால்‘விஷால் 31’ படத்தில் நடித்து முடித்துள்ளார். து.ப சரவணன் இயக்கியுள்ள ‘விஷால் 31’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி சென்னையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், ‘விஷால் 31’ படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘சூரரைப் போற்று’, ’வெந்து தணிந்தது காடு’ படத்தலைப்புகளின் வரிசையில் ‘வீரமே வாகை சூடும்’ தலைப்பையும் பாராட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள். சிவப்பு நிற பின்னணியில் கையில் தடியுடன் சண்டைக்காட்சிகளுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com