\
’விஷால் 33’ படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

’விஷால் 33’ படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

’விஷால் 33’ படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்
Published on: 

நடிகர் விஷாலின் ‘விஷால் 33’ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் விரைவில் ‘எனிமி’, ‘வீரமே வாகை சூடும்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது, அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘விஷால் 32’ படத்தில் நடித்துவரும் விஷால் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’விஷால் 33’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவிருக்கிறது என்று விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

’த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுதேவா நடிப்பில் தற்போது ‘பஹீரா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com