\
சென்னையில் தொடங்கிய ‘விஷால் 31’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

சென்னையில் தொடங்கிய ‘விஷால் 31’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

சென்னையில் தொடங்கிய ‘விஷால் 31’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு
Published on

’விஷால் 31’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

நடிகர் விஷால் ‘எனிமி’, ‘விஷால் 31’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ஹைதராபாத்தில் து.ப சரவணன் இயக்கும் ‘விஷால் 31’ படத்தில் நடித்து வந்தார் விஷால். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் 50 நாட்கள் ’விஷால் 31’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, இன்று முதல் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com