\
பிப்ரவரி 4-ல் வெளியாகும் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

பிப்ரவரி 4-ல் வெளியாகும் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

பிப்ரவரி 4-ல் வெளியாகும் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’
Published on

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை உறுதி செய்து தற்போது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘எனிமி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஷால் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் மிரட்டும் ட்ரெய்லரும் யுவனின் இசையும் கவனம் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ’வீரமே வாகை சூடும்’ வெளியாகவிருந்த நிலையில், கொரோனா சூழலால் வெளியீட்டைத் தள்ளி வைத்தது படக்குழு. ஆனால், தற்போது தமிழக அரசு ஊரடங்கை திரும்பப் பெற்றதால், ‘வீரமே வாகை சூடும்’ வரும் 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருக்கிறார்கள். அதேநாளில், தெலுங்கிலும் ’சாமாயனிடு’ என்ற பெயரில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com