சினிமா
டிசம்பரில் வெளியாகும் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டிசம்பரில் வெளியாகும் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் வெளியீடு குறித்து அறிவித்திருக்கிறது படக்குழு.
நடிகர் விஷால் ‘எனிமி’, ‘வீரமே வாகை சூடும்’ படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘எனிமி’ வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் நிலையில், ’வீரமே வாகை சூடும்’ படத்தின் செகெண்ட் லுக் போஸ்டரையும் வெளியீட்டையும் அறிவித்திருக்கிறது படக்குழு. து.ப சரவணன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார்.
யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடிக்கிறார்கள். சமீபத்தில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி செகெண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.