\
வெட்கமே இல்லாமல் பைரசியை ஆதரிப்பதா? ஹெச்.ராஜா மீது விஷால் பாய்ச்சல்

வெட்கமே இல்லாமல் பைரசியை ஆதரிப்பதா? ஹெச்.ராஜா மீது விஷால் பாய்ச்சல்

வெட்கமே இல்லாமல் பைரசியை ஆதரிப்பதா? ஹெச்.ராஜா மீது விஷால் பாய்ச்சல்
Published on

ஒரு தேசியக் கட்சியின், தேசிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஹெச்.ராஜா, பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது' என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் விஷால் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும், ‘ஒரு வேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து, அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை. ஹெச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த தலைவராக இருந்துகொண்டு, வெட்கமே இல்லாமல் எப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் கேட்டுள்ளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com