நடிகர் விஷால் தங்கை திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

நடிகர் விஷால் தங்கை திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

நடிகர் விஷால் தங்கை திருமணம்: திரையுலகினர் வாழ்த்து
Published on

நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யா மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் உம்மிடி உதய்குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் மகன், உம்மிடி க்ரிதிஷ்-க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இவர்கள் திருமணம், மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. 
இதில் தயாரிப்பாளர்கள், கதிரேசன், ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், ராக்லைன் வெங்கடேஷ், ரவி பிரசாத், நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, சுந்தர்.சி, குஷ்பூ, ஹன்ஸ்ராஜ் சக்சேனா உட்பட ஏராளமான திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com