தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம்முகநூல்

"கட்டடம் கட்டி முடித்தவுடன் முதல் நிகழ்ச்சியே என் திருமண முகூர்த்தம் தான்" - நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றனர்.

நடிகர் சங்க பொதுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகை குஷ்புநடிகை போன்றோர் கலந்து கொண்டனர். நடிகைகள் தேவயானி, சத்யபிரியா, குஷ்பூ, லதா, கோவை சரளா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

அந்தவகையில் இக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் விஷால் கூறுகையில் , “கடந்த ஏழு வருடத்திற்கு முன்பு இந்த இடத்தில் நான் பேசினேன். ஆனால் அன்றைக்கு நடிகர் ராதாரவி பொதுச்செயலாளராக இருந்தார். இப்போது இரண்டாவது முறையாக நான் பொதுச் செயலாளராக இருக்கிறேன். எங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம். 2019-ல் போடப்பட்ட வழக்கு மட்டும் போடப்படமால் இருந்திருந்தால் கடந்த மூன்று ஆண்டுகள் நமது கட்டடத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இருக்கும்.

ஆனால், அதற்கு குறுகீடாக இருந்தது அந்த தேர்தல். அதற்கு ஆன செலவை கூற வேண்டியது எமது கடமை. தேர்தலுக்கு மட்டும் 35 லட்சத்திலிருந்து 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டது. சென்னை வந்தால் மெரினாவில் உள்ள தலைவர்கள் நினைவு இடங்களை மக்கள் பார்க்க விரும்புவார்கள். அதே போல இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கட்டடம் அமைக்க வேண்டும்.

நடிகர் கார்த்தி, நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்ட தேவையான ஆவணங்களை தயார் செய்வதிலும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதிலும் தொடர்ந்து போராடி வந்தார். ஷூட்டிங் நேரத்திற்கு மத்தியில் நடிகர் சங்க பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறார். முதலில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கட்டும்.

பொதுச்செயலாளர் விஷால்
பொதுச்செயலாளர் விஷால் முகநூக்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்

கட்டடம் கட்டி முடிக்கும் வரை நான் எனது திருமணத்திற்காக காத்திருப்பேன். நடிகர் சங்க கட்டடம் வந்ததும் முதல் முகூர்த்தமாக எனது திருமணம் நடைபெறும். திருமணம் நடத்த தேவையான தொகையை பொருளாளர் கார்த்தியிடம் அட்வான்ஸாக கொடுத்து விடுகிறேன். எனது திருமணம் குறித்து ஏதேதோ தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அது எதிலும் உண்மை இல்லை. நான் ஆவலுடன் காத்து நிற்கிறேன் கட்டடம் கட்டி முடித்தவுடன் முதல் நிகழ்ச்சியே என் திருமணம் தான்” என்று தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com