ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு: மீண்டும் சென்னையில் துவங்கும் ’விஷால் 31’ படப்பிடிப்பு

ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு: மீண்டும் சென்னையில் துவங்கும் ’விஷால் 31’ படப்பிடிப்பு
ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு: மீண்டும் சென்னையில் துவங்கும் ’விஷால் 31’ படப்பிடிப்பு

ஹைதராபாத்தில் நடைபெற்ற ’விஷால் 31’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் விஷால் ‘எனிமி’, ‘விஷால் 31’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ஹைதராபாத்தில் து.ப சரவணன் இயக்கும் ‘விஷால் 31’ படத்தில் நடித்து வந்தார் விஷால். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.

சமீபத்தில், அவருக்கும் விஷாலுக்குமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது, விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிசியோதெரபி சிகிச்சையில் இருந்த விஷால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த நிலையில், ’விஷால் 31’ படத்தின் ஹைதராபாத் படிப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் மீதமுள்ள சில காட்சிகளை மட்டும் சென்னையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com