\
கேரளாவில் சிகிச்சை முடிந்து திரும்பிய விஷால் - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘லத்தி’

கேரளாவில் சிகிச்சை முடிந்து திரும்பிய விஷால் - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘லத்தி’

கேரளாவில் சிகிச்சை முடிந்து திரும்பிய விஷால் - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘லத்தி’
Published on

நடிகர் விஷால் கேரளாவில் எடுத்து வந்த சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் ‘லத்தி’ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால், ஏ. வினோத் குமார் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘லத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு, கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில், நடிகர் விஷாலுக்கு கை மற்றும் விரல்களில் ஹேர்லைன் பிராக்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால், உடனடியாக படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எலும்புகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக, நடிகர் விஷால் கேரளா சென்றார். தற்போது முழுமையாக குணமடைந்து, ‘லத்தி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் விஷால் மீண்டும் இணைந்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், "கேரளாவில் சில வார ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு, தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளேன். பெரிங்கோடு குரு கிரிபா ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு நன்றி. ‘லத்தி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள தயாராக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, தற்போது விஷால் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com