\
'அடங்க மறு' இயக்குநரோடு இணையும் நடிகர் விஷால்!

'அடங்க மறு' இயக்குநரோடு இணையும் நடிகர் விஷால்!

'அடங்க மறு' இயக்குநரோடு இணையும் நடிகர் விஷால்!
Published on

விஷால் நடிக்கும் அடுத்த படத்தை, இயக்குநர் கார்த்தி தங்கவேல் இயக்குவது உறுதியாகி உள்ளது. 'சக்ரா' படத்தை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் 'எனிமி' என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

'எனிமி' படத்தை தொடர்ந்து 'அடங்க மறு' படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிக்க உள்ளார் என சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்தன. அதேசமயம் இன்னும் சில இயக்குநர்களின் பெயர்களும் சொல்லப்பட்டன.

இந்த நிலையில், கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிப்பது என விஷால் முடிவெடுத்துள்ளார். அதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. இந்தப் படத்தை 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com