\
திருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்

திருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்

திருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்
Published on

நடிகர் விஷால் ஆந்திராவைச்‌ சேர்ந்த அனிஷா என்பவருடன் தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

‘செல்லமே’ தொடங்கி ‘சண்டக்கோழி’,‘இரும்புத்திரை’ என பல்வேறு படங்களில் நடித்தவர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. 

மேலும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக கட்டப்படும் புதிய கட்டடத்தில் விஷால் - அனிஷா திருமணம் நடைபெறவுள்ளது. விஷால் திருமணம் பற்றி கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக விஷால் அறிவித்துள்ளார். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும்வரை திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என கூறியிருந்த நிலையில் கட்டடம் கட்டும்பணி விரைவில் முடிய இருப்பதால் தற்போது திருமண அறிவிப்பை நடிகர் விஷால் வெளியிட்டிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com