தெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்?

தெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்?

தெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்?
Published on

நடிகர் விஷால் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பிரபல நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்ப தாகவும் செய்திகள் வெளியாயின. நடிகை வரலட்சுமி இதனை மறுத்திருந்தார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆந்திர தொழிலதிபரின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டியை  விஷால் திருமணம் செய்துகொள்ள போவதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் விஷாலுடன் அனிஷா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் பரவி வருகிறது. இவர்களது திருமணம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. அனிஷா ரெட்டி தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் விரைவில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஷாலின் திருமணம் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் வேளையில் விஷால் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com