\
சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் விஷால் - ஆர்யாவின் ‘எனிமி’

சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் விஷால் - ஆர்யாவின் ‘எனிமி’

சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் விஷால் - ஆர்யாவின் ‘எனிமி’
Published on: 

நடிகர் விஷால் - ஆர்யாவின் ‘எனிமி’ ஓடிடியில் வெளியாகிறது.

'அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா நடிப்பில் ’எனிமி’ கடந்த தீபாவளியையொட்டி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில் வில்லனாக ஆர்யா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், மிர்ணாளினி ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ’எனிமி’ வெளியாகி மூன்று மாதங்கள் ஆன பின்னும் டிஜிட்டல் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், ‘எனிமி’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது. வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com