\
"உலகத்துலேயே ஆபத்தான எதிரி உன்னைப்பத்தி தெரிஞ்ச நண்பன்தான்" - மிரட்டும் 'எனிமி' டீசர்

"உலகத்துலேயே ஆபத்தான எதிரி உன்னைப்பத்தி தெரிஞ்ச நண்பன்தான்" - மிரட்டும் 'எனிமி' டீசர்

"உலகத்துலேயே ஆபத்தான எதிரி உன்னைப்பத்தி தெரிஞ்ச நண்பன்தான்" - மிரட்டும் 'எனிமி' டீசர்
Published on

விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் ’எனிமி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

’அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், தற்போது விஷால் - ஆர்யா நடிப்பில் ’எனிமி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த, திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் ஆர்யா. இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. ‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

சமீபத்தில்தான், இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இந்த நிலையில், இன்று டீசர் வெளியாகியுள்ளதோடு வரும் செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என்று டீசரில் அறிவித்திருக்கிறது படக்குழு.

பிரம்மாண்டமாக காட்டப்படும் டீசரில் ஆர்யா - விஷால் இருவரும் துப்பாக்கிகளுடன் துரத்துகிறார்கள். டீசர் முடியும்போது ”உலகத்துலே ஆபத்தான எதிரி யார்னா உன்னைப்பத்தி எல்லாமே தெரிஞ்ச நண்பன்தான்” என்று பேசும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com