\
ஆர்யா - விஷாலின் ‘எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யா - விஷாலின் ‘எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யா - விஷாலின் ‘எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

ஆர்யா - விஷால் இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

'அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், தற்போது விஷால் - ஆர்யா நடிப்பில் ’எனிமி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் ஆர்யா. இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. ‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஆயுதபூஜையை முன்னிட்டு படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்ட நிலையில், தற்போது படம் வரும் நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியாகும் என்று நடிகர் ஆர்யா அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com