பிப்ரவரி 18-ல் வெளியாகும் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸ்

பிப்ரவரி 18-ல் வெளியாகும் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸ்

பிப்ரவரி 18-ல் வெளியாகும் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸ்
Published on

நடிகர் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் ’விலங்கு’ வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸில், இனியா, முனிஷ்காந்த்,பாலசரவணன்,ரேஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 7 எபிசோடுகளோடு ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது. திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார்.

இத்தொடர், எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மர்மமான வழக்கை, விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதில், ஏற்படும் திருப்பங்களே இந்தத் தொடர். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் கையாண்டுள்ளார். கலை இயக்குனராக துரைராஜ் பணியாற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com