\
வெப் சீரிஸ் பக்கம் நகரும் நடிகர் விமல்!

வெப் சீரிஸ் பக்கம் நகரும் நடிகர் விமல்!

வெப் சீரிஸ் பக்கம் நகரும் நடிகர் விமல்!
Published on: 

நடிகர் விமல் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

விமல் நடிப்பில் 'பசங்க', 'களவாணி', 'தூங்கா நகரம்' உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்தன. இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த சில வருடங்களாக விமல் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர் தோல்வியைத் தழுவின. இதனால், 'களவாணி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டார் விமல். அதற்காக மீண்டும் இயக்குநர் சற்குணத்துடன் கூட்டணி அமைத்தார். இருந்தாலும் 'களவாணி 2' படமும் படுதோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், தற்போது சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வரும் விமல், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த சீரிஸ், 'Zee 5' ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com