\
விக்ரமுடன் இணையும் பா.ரஞ்சித் - அதிகாரபூர்வ அறிவிப்பு

விக்ரமுடன் இணையும் பா.ரஞ்சித் - அதிகாரபூர்வ அறிவிப்பு

விக்ரமுடன் இணையும் பா.ரஞ்சித் - அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

விக்ரம் நடிக்கும் 61வது திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார்.

'சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் 61வது திரைப்படத்தை இயக்க பா.ரஞ்சித் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

விக்ரம் - பா.ரஞ்சித் முதன் முறையாக இணையும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ’மகான்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதன் வேலைகளை முடித்துக் கொடுத்துள்ளார் விக்ரம் பா. ரஞ்சித் திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com