ஜூலையில் தொடங்குகிறது ’விக்ரம் – துருவ் விக்ரம்’ இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு

ஜூலையில் தொடங்குகிறது ’விக்ரம் – துருவ் விக்ரம்’ இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு
ஜூலையில் தொடங்குகிறது ’விக்ரம் – துருவ் விக்ரம்’ இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு

விக்ரம் – துருவ் விக்ரமின் ‘விக்ரம் 60’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் தொடங்குகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ’விக்ரம் 60’ படத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று முடிந்தது. அதற்குப் பிறகு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்காமல் இருந்தனர். அதேபோல், படத்தில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு படப்பிடிப்பை தொடங்குவது என்றும் திட்டமிட்டனர். 

அதன்படி, தற்போது படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், படக்குழுவினர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டனர். இதன் காரணமாக, வரும் ஜூலை 3-ம் தேதியிலிருந்து ’விக்ரம் 60’ படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com