\
விக்ரமின் புதிய லுக்கை வெளியிட்ட "கோப்ரா" படக்குழு !

விக்ரமின் புதிய லுக்கை வெளியிட்ட "கோப்ரா" படக்குழு !

விக்ரமின் புதிய லுக்கை வெளியிட்ட "கோப்ரா" படக்குழு !
Published on

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் "கோப்ரா" திரைப்படத்தில் வரும் புதிய லுக்கை படக் குழுவினர் இன்று வெளியிட்டனர்.

அஜய் ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இவர் ஏற்கெனவே "டிமாண்டி காலனி", "இமைக்கா நொடிகள்" போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். "கோப்ரா" திரைப்படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட பலவிதமான கெட்டப்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் இருந்தார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் கோப்ரா படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் இருந்து "தும்பி துள்ளல்" என்ற பாடல் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு கேஜிஎஃப் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கோப்ராவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். அவருக்கு படத்தில் வில்லன் வேடம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் விக்ரம் "ரெட்ரோ ஸ்டைல்" காட்சியளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com